"கோல்டன் ஸ்பரோ என் நெஞ்சில ஆரோ" தெறிக்குது தனுஷ் பட பாடல்.!

சென்னை : தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான "கோல்டன் ஸ்பரோ" வெளியானது.

Nilavukku Enmel Ennadi Kobam First Single

சென்னை :தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான “கோல்டன் ஸ்பரோ” வெளியானது.

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தின் முதல் பாடல் ‘Golden Sparrow’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தபடி, பாடலும் அமர்க்களமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில், அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தனுஷ், ஜி.வி., அறிவு, சுப்லாஷினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலில் நடிகர் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

unknown node

பிரியங்கா மோகன் இதற்கு முன்பு தனுஷுடன் இணைந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான கேப்டன் மில்லரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் ஆடுகளம், அசுரன், பொல்லாதவன், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க, லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னா ஜி.கே. எடிட்டிங் செய்துள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் இப்படம் தாரிக்கப்பட்டுள்ளது.