தனுஷின் பிறந்தநாள் ட்ரீட்டாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் பாடலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவரகாத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
unknown node