தனது பாட்டி,உடன் பிறப்புகளுடன் தனுஷ்.! லைக்குகளை குவிக்கும் குடும்ப புகைப்படம்.!

The beautiful photo taken by Dhanush with his grandmother, brother and sisters is going very viral on social websites.

தனுஷ் தனது பாட்டி, அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் எடுத்து கொண்ட அழகான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” , செல்வராகவனுடன் இரண்டு படங்கள் ,தி க்ரே மேன் உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராக உள்ள இவரது படங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது அவர் குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.தனது பாட்டி, அண்ணன் மற்றும் சகோதரிகளுடன் தனுஷ் இருக்கும் அந்த அழகான புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

unknown nodeunknown node