கையில் வில் – அம்புடன் கெத்தாக நிற்கும் தனுஷ்.! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வரும் நோக்கில் படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது.

unknown node

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- செல்வராகவன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த நிலையில், நாளை தனுஷின் பிறந்த நாள் என்பதால், நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். போஸ்டரில், தனுஷ் கெத்தாக கையில் வில் – அம்புடன்  இருப்பது போல கட்டப்பட்டுள்ளது.

unknown node