நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeDhanush New Film [Image Source: Twitter ]
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷூடைய அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
unknown nodeDhanush New Film [Image Source: Twitter ]
இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படம் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாம், படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிப்பதாகவும், தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்-வாங்குன அடி போதும்.. இனி தனியாத்தான் வருவேன்..! அதிரடி முடிவெடுத்த சிவகார்த்திகேயன்.!
unknown nodeDhanush New Film [Image Source: Twitter ]
தனுஷ் அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும், ஏற்கனவே இயக்குனர் சேகர் கம்முலா கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான “லீடர்” எனும் அரசியல் கதை கொண்ட திரைப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் தனுஷும் கொடி திரைப்படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node