நடிகை ஸ்ருதிஹாசன், உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர் லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து, ட்வீட்டரில் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் அவரிடம், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கூறுங்கள். உங்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்றும் கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் இதற்க்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அதற்க்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதனால் நாம் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.
இதற்க்கு பதிலளித்த ரசிகர்கள், அப்பாவை போன்றே மக்களும் உள்ளார். புத்திசாலித்தனமாக பதிலளிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்கள்.
unknown node