ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'தர்பார்' மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.

இப்படத்தின் ட்ரெய்லர் திங்கள் கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

நயனதாரா ஹீரோயினாகவும், நிவேதா பெத்துராஜ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் என தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இப்பட ட்ரெய்லர் வரும் திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தர்பார் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த ட்ரைலரை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

unknown node