சென்னை:நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது இரட்டை மகன்கள் மற்றும் கணவருடன் நயன்தாரா தனது மகிழ்ச்சியான கிரீஸ் விடுமுறையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இரவு பொழுதில் நிலவை காட்டி தனது மகனை தோள் மீது சாய்த்து தாலாட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
unknown nodeதற்பொழுது, தனது இன்ஸ்டாகிராமில், காது குத்தப்படும் வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். வீடியோவில், நயன்தாரா காது குத்திக்கொள்வதற்கு முன்பு உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருப்பதைக் காணலாம்.
மேலும், (என்னால் முடியும் தோழா) என்று பாடிக்கொண்டே முழு திருப்தியுடன் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், காது குத்தியதும் சற்று ரத்தம் வழிந்தது. உடனே, “ரத்தமாரே” பாடலைப் பாடியதுடன் வீடியோவின் இறுதியில் நயனின் கியூட் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
unknown nodeஇந்த வீடியோ இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அவர் இதுவரை வெளியிட்ட வீடியோக்களிலிருந்து இது வேறுபட்டது என்றே சொல்லலாம். கடைசியாக ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்ததாக மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
