சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, தனது இரட்டை மகன்கள் மற்றும் கணவருடன் நயன்தாரா தனது மகிழ்ச்சியான கிரீஸ் விடுமுறையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இரவு பொழுதில் நிலவை காட்டி தனது மகனை தோள் மீது சாய்த்து தாலாட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். View this post on Instagram […]
கிரீஸில் இரண்டு புலம்பெயர்ந்த கப்பல்கள் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணவில்லை என அதிர்ச்சி. கைதிரா (கிரீஸ்): நேற்று கிரீஸ் தீவின் நீரில் சிதறிய இடிபாடுகளுக்கு மத்தியில் உடல்கள் மிதந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கிரீஸ் தீவில் சென்ற இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது. சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற டிங்கி கப்பல் மூழ்கியதில் 16 ஆபிரிக்க இளம் […]
கிரீஸ் நாட்டில் சிறிய ரக விமானம் மோதி, 22 வயது இளைஞர் பலியாகியுள்ளார். கிரீஸ் நாட்டிற்கு ஒரு 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் சுற்றுலா பயணியாக சுற்றிப்பார்க்க வந்துள்ளார். அங்கு, அவர் சிறிய ரக ஹெலிகாப்டர் பக்கம் நின்றுள்ளதாக தெரிகிறது. அப்போது, அந்த சிறிய ரக ஹெலிகாப்டரை விமானி இயக்கியதாக தெரிகிறது. இதில் ரெக்கை அருகே நின்றிந்த 22 வயது இளைஞர் மீது பின் ரெக்கை மோதி, பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தில் யார் மீது தவறு.? […]
கடல் நீரை மேகம் உறிஞ்சிய அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலுக்கும் ஆசியா மைனர் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பரப்பான ஏசியன் கடல் பரப்பும் மிகப்பெரிது. இந்நிலையில், இந்த கடலில் பல்வேறு தீவுகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் உள்ள ஏஜியான் கடற்கரையிலுள்ள கௌபாரா கடலிலிருந்து தற்போது ஒரு அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து கடலில் உள்ள நீர் மேல் நோக்கி அருவி போல உறிஞ்சப்படுகிறது. இதனை பார்த்து அதிசயித்த பலரும் இதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். […]
கிரீஸ் நாட்டில் ஸ்கியாதோஸ் என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் கடற்கரை ஒன்று உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் தரையில் இருந்து குறைந்த உயரத்திலேயே பறந்து செல்லும். இதனால் ஐரோப்பியாவின் செயின்ட் மார்ட்டன் என இந்த விமான நிலையம் அழைக்கப்படுகிறது. விமானங்கள் தரை இறங்கும் போது சுற்றுலா பயணிகள் தங்களுடைய போன்னை வைத்து செல்பி எடுத்து மகிழ்வது வழக்கமாக […]
ஏதென்ஸ் நகர உச்ச நீதிமன்ற கட்டிடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.ஆனால் இந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இது குறித்தும்,இந்த குண்டு வெடிப்பின் பின்னணி குறித்தும் ஏதென்ஸ் நகர காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.