மாநாடு டிரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாநாடு”. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
unknown nodeஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலருக்காக ரசிர்கர்கள் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், மாநாடு படத்தின் டிரைலர் அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அதன்படி, மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று மாலை 3.06 மணிக்கு அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown node