ஜெயம் ரவி அடுத்ததாக தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினில் முதன் முதலாக காஜல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
unknown nodeஇப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இதேபோல தான் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படத்தையும் விஜய் டிவி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU