சென்னை :தனது முதல் படமான லப்பர் பந்துவின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இது ரசிகர்களையும் திரைப்படத் துறையையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்க நன்றி தெரிவித்த்தோடு, தனது அடுத்ததாக தனுஷை இயக்கும் படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ”நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா?? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா??
எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
என்ன Motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த Update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும். என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன். ரொம்ப நன்றி தனுஷ் கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு Action, Cut சொல்ல காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node