சென்னை :நடிகர் அஜித் குமார் – ஷாலினியின் க்யூட்டான வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வரலட்சுமி நோன்பையொட்டி அஜித் காலில் விழுந்து ஆசி பெற முயல்கிறார் ஷாலினி. முதலில் இதனை அஜித் தடுத்து விட்டார்.
சில நொடிகளில் மீண்டும் ஷாலினி காலில் விழுந்ததை அடுத்து, “வீட்டுல போய்ட்டு நான் கால்ல விழணும்” என்று கலகலப்பாக பதிலளித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. அஜித்தும் ஷாலினியும் இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்துள்ளனர், அதுதான் ‘அமர்களம்’.
unknown node1999 ஆம் ஆண்டு சரண் இயக்கிய ‘அமர்களம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காதலித்து, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அஜித் உடனான திருமணத்திற்குப் பிறகு ஷாலினி நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார், அஜித் தற்போது தனது மோட்டார்ஸ்போர்ட்ஸ் பணிகளில் மும்முரமாக உள்ளார்.
