நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.!

நடிகர் ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIP Robo Shankar

சென்னை :வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வலப்பட்டு இறுதி மரியாதையுடன் நடிகர் ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவால் நேற்றைய தினம் (செப்டம்பர் 18) இரவு 8:30 மணியளவில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பின்னர், அவரது உடல் சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் தகனம் செய்யப்பட்டது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அவரது மனைவி பிரியங்கா கண்ணீருடன் நடனமாடி விடைகொடுத்தார்.

இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.