மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்ட சின்மயி ..!பிரபல கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ..!

பாடகி சின்மயி மீண்டும் ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 13 வருடங்களுக்கு முன்பு  ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற “வீழமாட்டோம் ” என்ற

பாடகி சின்மயி மீண்டும் ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.13 வருடங்களுக்கு முன்பு  ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற “வீழமாட்டோம் ” என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி  வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர்.

ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர். கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

unknown node

தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என தெரிவித்தார்.வைரமுத்துவின் பதிவிற்கு ‘பொய்யன்’ என சின்மயி பதிலளித்தார்.

unknown node

இந்நிலையில் பாடகி சின்மயி மீண்டும் ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவிட்டில்  இது கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா செய்தது என்று ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவிற்கு கீழே ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் நான் எனது நண்பர்களுடன் ஹோட்டலில்  தங்கி இருந்தேன்.அப்போது அங்கு இலங்கையின் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தங்கி இருந்தார்.அப்போது எனது தோழி அங்குள்ள அறையில் மலிங்கா இருப்பதாக தெரிவித்தார்.இதன் பின்னர் நான் அவரது அறைக்குள் சென்றேன் .அப்போது அவர் என்னை அங்கிருந்த மெத்தையில்  தள்ளிவிட்டு ,தவறாக நடந்துகொள்ள முயன்றார். அந்த நேரத்தில் ஓட்டலின் ஊழியர் வந்து கதவைத்தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்று உள்ளது.இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node