சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்!

சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா வரும் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 17ஆம் ஆண்டு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலக சினிமாக்களில் இருந்து

17வது ஆண்டாக சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது.

டிசம்பர் 12 தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.

சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா வரும் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 17ஆம் ஆண்டு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலக சினிமாக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.

அந்தவகையில் தமிழில் இருந்து இந்த வருடம் 12 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் முக்கியமாக, அசுரன், அடுத்த சாட்டை, பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜிவி, கனா, மெய், பிழை, ஒத்த செருப்பு, சீதகாதி, சில்லுகருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவானது டிசம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆறு நாட்களும் உலக சினிமாக்களில் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படவுள்ளது. சினிமா ரசிகர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்!