அஜித்தின் 61 -வது படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முக்கிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க படக்குழு ரஷ்யா செல்கின்றார்கள். நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61- வது திரைப்படம் குறித்த தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தல-61 திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளது உறுதி ஆகிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இதனையடுத்து தற்போது அஜித்தின் 61- வது படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவலை பரப்பி வருகின்றனர். மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரான் கடந்த 2019 – ஆம் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்” என தெரிவித்திருந்தார்.
அதைபோல் ஏற்கவே இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node