தனுஷ் ரசிகர்களுக்கு செம மாஸ் அப்டேட்... நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு..?

It has been reported that the shooting for the upcoming movie 'Nane Varuven' directed by Selvaragavan and starring Dhanush will start in May.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம். இதில் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிற்கு சென்று “தி க்ரே மேன்” என்ற படத்தில் நடித்துவருகிறார். இரண்டு மாதங்கள் கழித்து 43 வது படத்திற்கான அணைத்து படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்.

இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தனது அண்ணன் மற்றும் இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் படத்தை இந்தாண்டே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.