எளிமையாக நடைபெற்ற விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29, 2025 அன்று, அவரது இல்லத்தில் நடிகை சாய் தன்ஷிகாவுடனான திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.

Vishal - Sai Dhanshika - engagement

சென்னை :தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சாய் தன்ஷிகாவை, திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்டதும், தனது திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து, பின்னர் காதலர்களாக மாறியதாகவும், திருமணத்தை ஆகஸ்ட் 29, 2025 அன்று (விஷாலின் பிறந்தநாள்) நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முழுமையாக முடிவடையாததால், திருமணம் சில மாதங்களுக்கு பிற்போடப்பட்டு, முதலில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. சாய் தன்ஷிகா மகிழ்ச்சியுடன், “அவருடைய பிறந்தநாளில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்,” எனக் கூறினார்.

விஷால் தனது எக்ஸ் தளத்தில், “எனது பிறந்தநாளில் சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. எங்கள் குடும்பங்களுக்கு மத்தியில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்,” எனப் பதிவிட்டார். திருமணம் நடிகர் சங்கக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

unknown node