தமிழ் சினிமாவின் தளபதி விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27 அன்று மலேசியாவின் குவாலா லம்பூரில் உள்ள புகித் ஜலில் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இந்த படம் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முன் அவரது இறுதி சினிமா பயணமாகப் பார்க்கப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா இந்தியாவுக்கு வெளியே நடப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், சிலரிடம் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் முக்கிய காரணம் விஜயின் பெரும் ரசிகர் பட்டாளம் அங்கு உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் விஜயின் படங்கள் எப்போதும் பெரும் வெற்றி பெறுகின்றன.
இந்த விழா, விஜயின் உலகளாவிய ரசிகர்களை இணைத்து, படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டுக்கு முன்னோட்டமாக அமையும். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட வீடியோவில், விஜயின் பழைய படங்களின் (குஷி, கில்லி, போகிரி, மாஸ்டர், லியோ போன்றவை) காட்சிகள் மூலம் அவரது பிரபலத்தை நினைவூட்டி, மலேசிய ரசிகர்களின் சாட்சியங்களை சேர்த்துள்ளனர். இது விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முன் சினிமாவில் கடைசி படமாக இருப்பதால் சிறப்பானது.
விஜய் மலேசியாவுக்கு கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்தார்; இப்போது இந்த விழா அவரது முதல் பெரிய பொது நிகழ்ச்சியாக அமையும். புகித் ஜலில் ஸ்டேடியம், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய ஸ்டேடியம் (87,500 இருக்கைகள்) என்பதால், உலக ரசிகர்கள் கலந்துகொள்ளலாம். இசை அனிருத் ரவிச்சந்தரின் இசையில், பூஜா ஹெக்டே, போபி டியோல், மமிதா பைஜு,ஆகியோர் நடனம் ஆடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இசை வெளியீட்டிற்கு முன் ‘தளபதி கச்சேரி’ போன்ற ஒற்றைப் பாடல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் இசை வெளியிட்டு விழா நடைபெறுகிறது. விஜய், இந்த விழாவில் ரசிகர்களை உத்வேகப்படுத்தலாம். மலேசியாவில் நடப்பதால் இந்திய ரசிகர்கள் லைவாகப் பார்க்க முடியாத ஏமாற்றம் உள்ளது, ஆனால் உலக ரசிகர்களுக்கு இது பெரிய கொண்டாட்டமாக அமையும். படம் பொங்கல் ரிலீஸ் என்பதால், இசை வெளியீடு படத்தின் வெற்றிக்கு அடித்தளமாகும்.
