சென்னை :நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 2025-ல் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், மற்றும் சூர்யா ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் அரசியல் பயணத்துடன் தொடர்புடைய கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டிற்கு பிறகு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி, தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களை ஒரே மேடையில் திரட்டுவதன் மூலம், படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்க்க படக்குழு முயற்சிக்கிறது.
இந்த விழாவில் ரஜினி, கமல், அஜித், சூர்யா ஆகியோர் பங்கேற்பது உறுதியாகவில்லை என்றாலும், அவர்களை அழைப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்களிடையே விஜய்யின் பெரும் செல்வாக்கு, இந்த விழாவை மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இசை வெளியீட்டு விழா, விஜய்யின் திரை மற்றும் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். விரைவில் படத்திற்கு எத்தனை பாடல்கள் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்புகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
