மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் – ஜாய் கிரிசில்டா புகார்!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

Madhampatty Rangaraj

சென்னை :நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் தனது தாயுடன் வந்து புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா தளத்தில் பதிவிட்ட நிலையில், தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காத ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜாய் கிரிஸில்டா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் முன்னர் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன, குறிப்பாக ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை பொதுவெளியில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேலும், அவரது முதல் மனைவி ஸ்ருதியும் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை, ஆனால் முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்து “நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி” என்று குறிப்பிட்டிருந்தார்.