சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை […]
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தனது ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார், அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி ஏராளமான […]
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு மோசடி புகார். அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் […]
மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் […]
நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் காவல் ஆணையரகத்தில் புகார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரவுடிகளை ஊக்குவிக்க ரவுடி பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆர்யா பெயரை சொல்லி ரூ.70 லட்சம் பண மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்த காவல் துறைக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா என்பவர் சென்னை காவல் துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதில், நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் வண்டி ஓட்டுனரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் டெல்லியில் உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஒரு கடையில் தான் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று 08:16 மணி அளவில் சாலையில் போக்குவரத்துக்காக காத்திருந்ததாகவும், […]
பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன்.இவர் அங்கு பயின்ற பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை,14 நாட்கள் புழல் சிறையில் அடைக்குமாறு சென்னை எழும்பூர் […]
2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாரிசில் உள்ள போர்க்-லா- ரெய்ன் என்ற தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவ கோப்புகளில் இருந்து, ஒரு பெண்ணின் நம்பரை எடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறி குறுந்தகவல்களை அனுப்பியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் வெப்கேமுக்கு முன்னால், ஆடை இன்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். […]
வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் […]
தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, நடிகை விஜயலட்சுமி கடந்த 8 மாதமாக அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் அதற்கான வாடகையான ரூ.3 லட்சத்தை இன்னும் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். தற்போது அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்று புகார் எழுந்துள்ளது. தமிழமெங்கும் பேரூராட்சிகளில் பணியாற்றக் கூடிய குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளம் குறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1,900ல் இருந்து ரூ.1,300ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக் காலத்தில் சம்பளக்குறைப்பு ஊழியர்களில் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திடீரென்று குறைக்கப்பட்ட ஊழியர்களின் சம்பள குறைப்பால் ஒரு ஊழியருக்கு ரூ.7,000 வரை இழப்பு […]
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் முறைகேடுகள் நடப்பதாக குவிந்த புகாரை அடுத்து சிபிஐ விடியவிடிய சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகளை குறைத்து நிர்ணயம் செய்து வரிவிதிப்பதாகவும்,வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றனர் என்று சுங்க அதிகாரிகள் சிலர் மோடி செய்வதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் சரக்கு முனைத்திற்கு விரைந்த சிபிஐ ஆவணங்களை அனைத்தையும் சோதனை செய்தனர்.மேலும் […]
மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்கலாம் என முன்னாள் மின்சாரத்துறை பணியாளர் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் மின்சாரத்துறை பணியாளர் காந்தி, மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருக்கும் என நினைத்தால் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மின் கட்டணத்தில் குளறுபடி இருந்தால் பணம் கட்டவேண்டிய தேதிக்கு, 3 நாளுக்கு முன்னதாகவே உதவி பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் அடிப்படையில் உதவி பொறியாளர் உங்களுக்கு விளக்கம் […]
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் திருமணமாகி சில வருடங்கள் கடந்த பின்பே மீண்டும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜோதிகா ராட்சசி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ” அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் […]
சினிமா திரையுலகில் கண்ணடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை ப்ரியா வாரியர். இயக்குனர் ஓமர் லாலு ப்ரியா வாரியர் மீது புகார் அளித்துள்ளார். சினிமா திரையுலகில் கண்ணடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை ப்ரியா வாரியர். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்படுகிறார். இந்நிலையில், இயக்குனர் ஓமர் லாலு இயக்கத்தில் உருவான படம் ஒரு அடர் லவ். இந்த படத்தின் கதாநாயகியாக நூரின் ஷெரீப் தான் தேர்வு செய்யப்பட்டார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது […]
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து ஹெரான பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார்.அப்போது ஐயப்பன் பக்த்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.பக்தர்களின் எதிர்ப்பால் ஹெரான பாத்திமா ஐயப்பன் கோயிலுக்குள் நுழையும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றார். இந்நிலையில் தற்போது இவர் செக் மோசடி செய்ததாக தகவல் வெளியாகிய செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் இதில் இவர் செய்த செக் மோசடியில் நீதிமன்றமும் இவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது என்றும் அவருக்கு சிறை தண்டனை வழங்கியதாகவும் […]
வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என கூறிய சையத் சுஜா மீது டெல்லி காவல்துறையில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யமுடியும்.கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் எனக்கு ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு […]
சமீப காலமாக பட வாய்ப்பில்லாமல் மார்கெட் இழந்திருக்கும் தமிழகத்தின் அடுத்த குஷ்பு என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’,அதேபோல் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுடன் ஒரு படம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஹன்சிகாவிடம் முன்பு மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் ஹன்சிகா மீது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் நடிகை ஹன்சிகாவுடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா […]