ஓடிடிக்கு வந்த பிளாக் பஸ்டர் டியூட்...எப்போது ரிலீஸ் தெரியுமா?

`டியூட்’ திரைப்படம், நவம்பர் 14-ம் தேதி Netflix OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும்

pradeep ranganathan dude

சென்னை :கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவான ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘டியூட்’ (Dude), வரும் நவம்பர் 14, 2025 அன்று Netflix OTT தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், இப்போது டிஜிட்டல் தளத்திற்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும், மமிதா பைஜூ அவரது காதலியாகவும் நடித்துள்ளனர். சரத்குமார், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய்இசையில் அமைந்த பாடல்கள் ஏற்கெனவே யூடியூபில் மில்லியன் கணக்கில் வியூஸ் பெற்று வைரலாகின.

அதைப்போலவே, படத்தின் டிரெய்லர் மற்றும் “ஊரும் ” பாடல் இணையத்தில் பட்டையைக் கிளப்பிய நிலையில், Netflix-இல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டவுடன் #DudeOnNetflix, #DudeFromNov14 போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன. வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் பார்க்க ஏற்ற கிளீன் ஃபன் எண்டர்டெய்னராக ‘டியூட்’ கொண்டாடப்படுகிறது.திரையரங்கில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இது பெரிய கொண்டாட்டமாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.