பாலியல் புகார்.. மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு.!

கேரள பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளித்த புகாரின் பேரில், நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

actor Baburaj

இடுக்கி :கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019 இல் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அடிமாலி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த  ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வாக்குமூலத்தை பதிவு செய்த இடுக்கி மாவட்டம் அடிமாலி போலீஸ் வழக்கு பதிவு செய்து தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நடிகர் பாபுராஜ் தவிர இதற்கு முன்னதாக, நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.