ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். மானபங்கம் செய்ய முயன்ற நபரை போலீசிடம் பிடித்து ஒப்படைத்த நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா ((Loknath Behera)) பாராட்டுத் தெரிவித்தார்.
இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் கூறியிருந்தார்.
unknown nodeதிருச்சூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அந்த நபர் தம்மை விட்டு விடும்படி கெஞ்சியதாகவும், எனினும், தவறு செய்த அந்த நபர் சட்டப்படி தண்டிக்கப்படுவதோடு, அவர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துணிந்து புகார் கொடுத்ததாகவும் சனுசா கூறியிருந்தார். இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்டதற்காக, நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
unknown nodeமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.