கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்…தனுஷ் குரலில் மிரட்ட வரும் முதல் பாடல்.!

Captain Miller First single

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வரும் 22ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் தனுஷ் இப்பாடலை பாடியுள்ளார். படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

அயலான், லால் சலாம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாடு திரையரங்கு உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 38 மொழிகளில்…தமிழ் சினிமாவை மாற்ற போகும்’கங்குவா’ திரைப்படம்!

இதற்கிடையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளனர் என்றும்,  இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்