கேப்டன் மில்லர் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

captain miller ott release date

தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்

இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

அரசியலில் என்ட்ரி ! சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக விஜய் அறிவிப்பு!

வசூல்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கூறிவந்தனர். இன்னும் இந்த திரைப்படம் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

ஓடிடி ரிலீஸ் தேதி

இந்நிலையில், படம் திரையரங்குகளுக்கு பிறகு எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன்  காத்திருந்த நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.