கேட்கல.... கேட்கல.. சத்தமா !வெளியானது தளபதி விஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் !

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரைலர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரைலர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது .மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்து விட்டது.

unknown node

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனம் இன்று பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் அறிவித்தது.மேலும் படம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான முதலே படத்தின் ட்ரைலர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது.குறிப்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிகில் ட்ரைலர் குறித்த ஹாஷ்டேக் நேற்று முதலே ட்ரெண்டாகியது.தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இதனை தளபதி  விஜய்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.