பிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை செய்ததாக தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை செய்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக இப்படம் 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

unknown node

இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் கட்டவுட் பெயருக்கு பதிலாக புதிய முயற்சியாக இரண்டு விவசாயிகளின் கடனை அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள இரண்டு விவசாயிகள் வாங்கிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் விவசாய கடனை தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக அடைத்துள்ளனர். இந்தச் செய்தி பல்வேறு தரப்பினர் மத்தியிலும்பாராட்டை பெற்று வருகிறது.