நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 57 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியான பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், சேரன் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே, இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து தனத்தை-மகள் உறவு இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயில் யாரை வைப்பது என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சேரன், லொஸ்லியா மற்றும் கஸ்தூரியை பரிந்துரைத்தார்.
சேரன் தனக்கு சார்பாக பேசுவார் என எதிர்பார்த்த லொஸ்லியாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இதனையடுத்து, இவர் கவின் மற்றும் தர்சனிடம், நான் சேரன் அப்பாவிடம் எனக்காக பேசுவார் என எதிர்பார்த்தது தப்பு தானே என கதறி அழுகிறார்.
unknown node