biggboss 3: கவினின் காதல் பாடலால் கர்வம் கொண்டெழுந்த காதலி!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கவின், லாஸ்லியா மற்றும் சாக்ஷி மூவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இதில் கவின் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், கவின் ‘நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட சாக்ஷி எழுந்து நின்று சிரிப்பை அடக்க முடியாமல், சிரித்துக் கொண்டே, கவின் மீது தலையணையை தூக்கி எறிகிறார்.
ஆனா.. உனக்கு மட்டும் வருது பாருயா வகை வகையா.. ???????? #Day29 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3wPxdaTo25
— Vijay Television (@vijaytelevision) July 22, 2019