உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து இந்நிகழ்ச்சியில் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெறவுள்ளதாக உலகநாயகன் கமலஹாசன் கூறியுள்ளார்.
கமலஹாசன் இதுகுறித்து லாஸ்லியாவிடம், நாமினேஷன் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்று கேட்டதற்கு, முதலில் நாமினேஷன் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் சாக்ஷி மற்றும் மதுமிதா என லாஸ்லியா பதில் அளித்துள்ளார்.
unknown node