‘பிடிக்கைலைனா பிரியங்கா சாக்கடைல தள்ளிருவாங்க’…அன்றே கணித்த பிக் பாஸ் பிரபலம்!
பிடிக்கைலைனா குழிதோண்டி புதைச்சிருவாங்க அது தான் பிரியங்காவின் குணம் என நிரூப் நந்தகுமார் பேசியுள்ளார்.
சென்னை : சின்ன திரையில் பற்றி எரியும் தீயை போல பெரிய விஷயமாக வெடித்துள்ளது என்றால் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் தான் இந்த அளவுக்கு பெரிய விஷயமாகவும் வெடித்துள்ளது.
நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமாக அமைந்த, பிரியங்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரியங்கா குணம் இது தான் என முன்பே கணித்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோ அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ. அதில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சக போட்டியாளரான நிரூப் நந்தகுமார் கடுமையாக தாக்கி பேசுவதை காணலாம்.
பிரியங்கா மிகவும் சுயநலம் கொண்ட ஒரு பெண் எனவும் , அடுத்தவங்களோட கஷ்டத்தில் சந்தோசம் கொண்டாடவேண்டும் என நினைக்க கூடியவர் என கூறுகிறார். அது மட்டுமின்றி, ஒருவர் கூட பிரியங்காவுக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் சாக்கடையில் தள்ளி விடக்கூடிய ஒரு குணம் கொண்ட ஒருவர் எனவும் கோபத்துடன் கூறுகிறார்.
பேசி பேசிய பிடிக்காதவர்கள் அனைவரையும் குழி தோண்டி புதைத்து விடுவாள் எனவும் நிரூப் நந்தகுமார் ப்ரியங்காவின் மோசமான குணம் இது தான் என சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அவர் பேசியதை போலவே, இப்போது மணிமேகலை பிரச்சனைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது.
நிரூப் நந்தகுமார் பேசியதைப்போலவே, மணிமேகலை வளர்ச்சி பிடிக்காமல் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய வேலையே செய்யவிடாமல் தடுத்து தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியதாக குற்றச்சாட்டை முன் வைத்து பெயரை குறிப்பிடாமல் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.
எனவே, இந்த சூழலில் நிரூப் நந்தகுமார் பேசிய வீடியோவும் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இவ்வளவு வன்மம் இருக்கவே கூடாது எனவும், பிரியங்காவின் மோசமான குணத்தை அன்றே கணித்துள்ளார் நிரூப் நந்தகுமார் எனவும் கூறி வருகிறார்கள்.