BIGG BOSS 5 promo 2 : கஷ்டத்தை வெளில சொல்ல கூடாதா....? என்ன ராஜு இப்படி சொல்லிடீங்க...!

It is better to come forward without telling the difficulty outside, Raju tells the little girl that I am the wall.

கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான்  சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு கூறியுள்ளார். இது குறித்து ராஜு கூறுகையில் நீங்கள் கடந்து வந்த பாதையின் கஷ்டத்தை கூறுவது  இந்த நிகழ்வாக இருந்தாலும் கலைஞர்கள் யாரும் தங்கள் கஷ்டத்தை காட்டாமல் மகிழ்ச்சியான முகத்தை வெளியில் காட்ட வேண்டும்.

எனவே நான் உங்களுக்கு சுவராக இருக்கிறேன். அனைவரும் நன்றாக உள்ளது என தட்டி கொடுத்தால் நீங்கள் முன்னேற முடியாது, நீங்கள் என்னையும் கடந்து வெளியே வாருங்கள் என கூறி, சின்ன பொண்ணுக்கு எதிர்மறையான வாக்கு கொடுக்கிறார். இதோ அந்த புரோமோ விடியோ,

unknown node