விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.!

The upcoming Mohandas starrer starring Vishnu Vishal is said to have co-starred in the Big Boss celebrity Shariq.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஷாரிக் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் மோகன்தாஸ். விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை ‘களவு’ திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார் இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் ,அதில் சைக்கோ கொலைகாரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோகன்தாஸ் படத்தில்பிரபல ஸ்டண்ட் கலைஞர்களாக அன்பறிவ் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவரும் , நட்சத்திர தம்பதியினரான ரியாஸ் மற்றும் உமா ரியாஸின் மகனுமான ஷாரிக் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.அதனுடன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அவர்களும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.!