பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்.! 3டி-ல் உருவாகும் பிரபாஸ்-22.!

பிரபாஸ் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' என்ற 3டி-ல் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிப்பதுடன் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற 3டி-ல் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிப்பதுடன் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த பிரபாஸ் 21 ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.

தற்போது அவரது 22வது படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓம் ராவத் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு “AdiPurush” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓம் ராவத் பாலிவுட்டில் Tanhaji என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஷன் குமாரின் டி. சீரிஸ் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாகும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மற்ற வெளிநாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு 2021ல் தொடங்கப்படும் என்றும், 2020ல் படம் ரிலீஸாகும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பிரபாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தீமைக்கு எதிராக நன்மை பெற்ற வெற்றியினை கொண்டாடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். 3டி ல் உருவாகும் இந்த படம் கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக கொண்டு ராமாயண காவியத்தினை தழுவி எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது. பிரபாஸ் அவர்களின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node
பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்.! 3டி-ல் உருவாகும் பிரபாஸ்-22.!