நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க.!ஆரியை வறுத்தெடுக்கும் பாலாஜி ,அனிதா.!

Balaji and Anita together question Aari saying that you should be favored for supporting Sanam.here is the promo video

சனமுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க என்று கூறி ஆரியை பாலாஜியும்,அனிதாவும் இணைந்து கேள்வி கேட்கின்றனர்.

கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து முதல் ஒன்பது இடங்களை ஆரி,சனம், பாலாஜி, அர்ச்சனா,ரியோ,ஆஜீத்,ரம்யா, ரமேஷ்,சோம் ஆகியோர் நிற்க பத்தாவது இடத்தில் நிற்க அனிதாவை கூற அவர் நான் நிற்கமாட்டேன் என்று அதிலிருந்து விலகினார் .இதில் இரண்டாவது இடத்திற்கு சனம் மற்றும் அனிதா நிற்க ,அதில் சனமுக்கு ஆதரவாக ஆணி பேசியது தொடர்பாக பாலாஜி மற்றும் அனிதா அவரை கேள்வி எழுப்புகின்றனர் .

தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில்,சனமுக்கு யாரும் ஃபேவரிஸம் பண்ணவில்லை என்றால் சனமுக்கு ஒரு கால் வந்ததற்காக இரண்டு கால் வந்தவர்கள் என்ன தப்பு செய்தார்கள் என்று பாலாஜி கேள்வி எழுப்புகிறார் .மேலும் நானும் தோல்வி அடைந்ததாக இருக்கட்டும் ,ஏன் சனமுக்கு ஓட்டு போட்டீங்க என்று அனிதா ஆரியிடம் கேட்க ,அவர் அதற்கு தகுதியானவர் என்பதால் ஆதரவு தெரிவித்தேன் என்று கூறினார் .மேலும் நீங்க ஓட்டு போட்டது தவறு என்றும் ,நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க என்று அனிதா மீண்டும் கூற அது உங்கள் பார்வை என்று ஆரி கூறுகிறார் .

அதனையடுத்து பாலாஜி நீங்க ஒரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசி விட்டு இன்னொரு பக்கத்தில் உள்ள நியாயத்தை பேசாமல் விட்டு விட்டீர்கள் என்று கூறுகிறார் . அனிதா மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கிறார்கள் .

unknown node