லாரன்ஸ்க்கு கிடைத்த அதிரடியான பிறந்தநாள் பரிசு.! ஆக்ரோஷமான 'ருத்ரன்' வீடியோ இதோ...

நடன இயக்குனராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா

நடன இயக்குனராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வளைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Happy Birthday Raghava Lawrence [Image Source: Twitter ]

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவர் நடித்துள்ள “ருத்ரன்” படத்தின் கிலிம்ப்ஸ் (Glimpse) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளார். இதில் வரும் சண்டைக்காட்சிகள் மற்றும் பின்னை இசை காண்போரை மெசிலிர்க்க வைத்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியுள்ளது.

unknown node

இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர் சிவாஜித், நாசர், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், ஷியாம் பிரசாத் மேலும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இதையும் படியுங்களேன்-வாவ் செம க்யூட்… மஞ்சள் நிற புடவையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட அதுல்யா ரவி.!

unknown node

Rudhran Glimpse

அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த திரைபடத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் VFX பணிகள் இன்னும் முடிவடையாததால், தற்போது டிசம்பர் 2022ல் இருந்து ஏப்ரல் 2023 வெளியீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது, மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.