யானை பலத்துடன் வருகிறார் அருண் விஜய்.! முதல் பார்வை வெளியீடு.!

அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது.

அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று படத்தின் முதல் பார்வை  வெளியாகியுள்ளது. படத்திற்கு “யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது.

unknown node

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.