ரசிகர்ஒருவர்அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில் இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்று அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை வீட்டில் தியேட்டர் எஃபெக்டில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து நல்ல ஸ்பீக்கர்களை சூர்யா ரசிகர் ஒருவர் வாங்கி உள்ளார்.
தான் வாங்கியுள்ள ஸ்பீக்கர்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு அமேசான் ப்ரைம் நிறுவனத்தை டேக் செய்து ஒரு லட்சம் செலவுப்பா படத்தை ரீலிஸ் பண்ணுங்க என் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க என்று பதிவிட்ட பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.
unknown node