Aparna Das Marriage:
மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர்.
unknown nodeAparna Das -Deepak Parambol married [file image]மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொழுது, இவர்களது திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் ஆதிகேசவா படத்தில் நடித்த அபர்ணா தாஸ். தமிழில் டாடா, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்தார்.
View this post on Instagram
நேற்றைய தினம், திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்ட புகைப்படங்களை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் அது தற்போது வைரலாகி வருகிறது.மனோகரம் என்ற படத்தில் தீபக்கும், அபர்ணாவும் இணைந்து நடித்தனர். இவர்களது காதல் கதையும் அங்கு தான் தொடங்கியதாக கூறப்படுகிறது.
