ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

Anushka Shetty நடிகை அனுஷ்கா பழைய பார்மில் சினிமாவிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக பழைய படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா

Anushka Shetty

Anushka Shettyநடிகை அனுஷ்கா பழைய பார்மில் சினிமாவிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக பழைய படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலே பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் நடிகை அனுஷ்காவும் ஒருவர்.

READ MORE –தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு வந்தார். அதன்பிறகு இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சற்று அதிகாரிக்க செய்த காரணத்தால் அவருடைய சினிமா வாழ்கை பாதிப்படைந்தது என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்ததன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே சொல்லலாம்.

READ MORE –அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

அனுஷ்காவின் மன நிலை இந்த படத்தில் நடித்தால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று யோசித்து அந்த படத்தில் நடித்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய காரணத்தால் சில மாதங்கள் அனுஷ்கா படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு பாகுபலி படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

READ MORE –உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது!

பாகுபலி படத்தில் நடிக்கும்போதே அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகரித்து தான் இருந்தது. சிஜி வேலைகள் மூலம் தான் அனுஷ்காவிற்கு உடல் எடை கம்மியாக இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்காவிற்கு பெயர் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

READ MORE –அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

கடைசியாக அனுஷ்கா நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அப்போதும் உடல் எடை சற்று அதிகமாக இருந்த காரணத்தால் ஒருமுறை கூட வெளிவரவில்லை. இந்நிலையில், இத்தனை வருடங்கள் கழித்து வொர்க்அவுட்கள் செய்து வந்த அவர் தற்போது ஸ்லிம்மாகஇருக்கிறார்.

அனுஷ்கா தற்போது மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ‘கத்தனார் – தி வைல்டு சோர்சரர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தினை ரோஜபின் தாமஸ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளிய வந்தபோது தான் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பழைய நிலைமைக்கு அனுஷ்கா திரும்பி உள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். புகைப்படங்களை பார்த்த பலரும் ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல என கூறி வருகிறார்கள்.

unknown node

AnushkaShetty [file image]