ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக பேட்ட படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது.
unknown nodeநடிகர் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற தனது முதல் பாடலின் மூலம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்க்து.
unknown nodeஅனிருத், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
unknown nodeஇந்நிலையில் முதன்முறையாக ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு இசையமைத்து வருகிறார்.நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அனிருத்துக்கு பேட்ட படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது. வீடியோவில் ராக் ஸ்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனிருத், இந்த தலைமுறைக்கான இசையமைப்பாளர் புகழாரம் பேட்ட படக்குழுவை தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாக கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node