ஆர்ஆர் ஆர்-ஐ ஓடவிட்ட அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2'.. வரலாற்றில் புதிய சாதனை.!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 முதல் நாளில் ரூ.294 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Pushpa2TheRule

சென்னை:நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான “புஷ்பா 2” திரைப்படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம்  அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவே அதிக வசூலாகும். ‘RRR’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், அல்லு அர்ஜுன் திரை வாழ்வில் இது அதிகபட்ச ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் பட நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

unknown node

மேலும், இந்தியாவில் மட்டும் படம் ரூ.180 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியில் இப்படத்தின் முதல் நாளில் ரூ.72 கோடிவசூலித்துள்ளது. தெலுங்கு மொழியில் மட்டும் 95 கோடி எனவும், ஹிந்தியில் 67 கோடி, தமிழகத்தில் 7 கோடி, கர்நாடகாவில்1 கோடி, மலையாளத்தில் 5 கோடி என வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.