அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது…!.யார் என்று தெரிந்தது…!!!

Default Image

நடிகை அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது அவரது முன்னாள் காதலரும் மற்றும் நடிகை ரதியின் மகனுமான நடிகர் தனுஜ் விர்வானியா என்பது தெரிவந்துள்ளதாக இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மதிக்கதக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய இளைய மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படங்கள் யாரால் வெளியிடப்பட்டது என்று கேள்விகள் எழுந்தன.இது அக்‌‌ஷரா ஹாசனையும் அதிர்ச்சி அடைய செய்தது.
Image result for akshara haasan
இந்த விவகாரம் தொடர்பாக அக்‌‌ஷரா ஹாசன் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த இந்த புகாரில் வெளியான அந்த படங்கள் ஒரு படத்திற்கான போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது என்று கூறிய அக்ஷ்ரா. யார் கசியவிட்டது என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
விசாரணையை தொடங்கிய மும்பை போலீசார் நடிகை அக்‌‌ஷராவின்  நண்பரும்,காதலறுமான நடிகர் தனுஜ் இந்த படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.யார் இந்த தனுஜ் என்றால் 1980-களில் கமலுடன் உல்லாசப் பறவைகள் மற்றும் நடிகர் ரஜினியுடன் முரட்டு காளை போன்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை ரதியின் மகன்.தற்போது தனுஜ் விர்வானி நடிகருமாவர் இவர் நடிகை அக்‌‌ஷராவை காதலித்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். தற்போது வெளியான புகைப்படங்கள் எல்லாம் அக்‌‌ஷரா 5 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஒரு ஐ போனில் எடுக்கப்பட்டவையாம்.
Related image
நடிகை அக்‌‌ஷரா தன்னுடைய படங்களை எல்லாம் 2013-ம் ஆண்டு காதலன் தனுஜிடம் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த புகைப்படங்கள் வெளியாகியது. எனவே அக்‌‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் தனுஜால் கசியவிடப்பட்டதா என்கிற கோணத்தில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை அக்‌‌ஷராவின் புகைப்படங்களை தான் கசியவிடவில்லை என்று நடிகர் தனுஜ் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நடிகர் தனுஜின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்து வருகிறது என்பதை நாங்கள் அறிவோம்.நடிகை அக்‌‌ஷரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.மேலும் பல வருடங்கள் அக்‌‌ஷராவும், தனுஜும் டேட்டிங் செய்தார்கள் என்பது உண்மை தான் ஆனால் தற்போது அவர்கள் ஒன்றாக இல்லை. தற்போது இருவரும் நண்பர்களாக நீடிக்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இரு நாட்களுக்கு முன்புகூட கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள்.
Related image
மேலும் அவர்களுடைய உரையாடல்களை நடிகர் தனுஜ் வைத்துள்ளார். வேண்டுமானால்  அதையும் வெளியிடுவோம். இதனிடியயே நட்பு ரீதியில் அவர்கள் செய்துகொண்ட கிண்டல் மற்றும் இருவருடைய காதல் பிரிவினால் நட்பு மோசமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இன்னமும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள்.நடிகை அக்‌‌ஷரா ஒருவேளை தனுஜை குற்றம்சாட்ட வேண்டுமென்றால் அவர் பல மாதங்களாக தனுஜிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது ஆனால் அக்‌‌ஷரா எதிர்கொண்டு வரும் இந்தப் பிரச்சினையை நடிகர் தனுஜ் நன்கு அறிவார்.மேலும் காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் நாங்கள் (தனுஜ்) ஒத்துழைக்க  தயாராக உள்ளார். இதில் குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்