விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது.
பைக் ரைட் செய்துகொண்டிருந்த நடிகர் அஜித் குமார், ஒரு வழியாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
unknown nodeAjithkumar [Image source : instagram]
ஆனால், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், தற்போது நடிகைதிரிஷாதற்போது அஜர்பைஜானில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?
அஜர்பைஜானில் இருந்து தனது படங்களைப் பகிர்ந்து கொண்ட த்ரிஷா, அஜர்பைஜான் கொடி எமோஜியுடன், “உலகமே எனது சிப்பி” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் அஜித்தின் அஜர்பைஜானில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் பொழுது, அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிப்பார் என்று தெரிகிறது.
unknown nodeAjithkumar [Image source : instagram]
அஜர்பைஜான் ஷெட்யூலைத் தொடர்ந்து, ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று படக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் சென்னையில் ஒரு சிறிய பகுதியை மட்டும் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
AI Posters: சமையல் ஜாம்பவானாக அஜித் குமார்! இணையத்தை கலக்கும் ஏஐ புகைப்படங்கள்…
ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய நான்கு படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா 8 வருடங்கள் கழித்து ஐந்தாவது முறையாக விடாமுயற்சியில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
