“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
unknown nodeஇந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeஇந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடிகர் அஜித் குமார் இன்று ஹைதராபாத் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node11-ஆம் தேதி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு டைட்டில் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node