விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இந்த மூன்று படங்களும் விஜயின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்கள் என்று கூட கூறலாம்.
unknown nodeஇப்படி மூன்று வெற்றிப்படங்களை விஜய்க்காக கொடுத்த முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க மாட்டாரா என பலர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது உண்டு. தளபதி 65 திரைப்படத்தை எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கவிருந்தது ஆனால் சில காரணங்களால் அவரால் இயக்க முடியாமல் போய்விட்டது.
unknown nodeஇந்த நிலையில், இயக்குனர் முருகதாஸ் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, சமீபத்திய ஒரு பேட்டியில், இயக்குனர் முருகதாஸ் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-5 லட்சம் பரிசு …ஆபாச படத்தை காட்டி பணம் கேக்குறாங்க…கதறி கண்ணீர் விட்ட சீரியல் நடிகை.!
unknown nodeஅது என்னவென்றால், விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய கான்செப்டுடன் தான் விஜய்யை முருகதாஸ் அணுகியுள்ளாராம். உடனடியாக அவர் ஓகே சொல்லிவிட்டாராம், மகேஷ்பாபு நடித்தால் தான் அந்த படத்தில் நடிப்பேன் என்றும் விஜய் கூறினாராம்.
unknown nodeஇதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழில் விஜய் ஹீரோவாகவும், மகேஷ்பாபு வில்லனாம். அதேபோல, தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும் விஜய் வில்லனாக நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளாராம் ” என்ற தகவலை முருகதாஸ் பகிர்ந்துள்ளார். இந்த படம் மட்டும் நடந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொண்ட்டாட்டம் தான் என்பதில் சந்தகமே இல்லை.