என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு, நீண்டநாள் காதலர் நவநீத் என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது

Sakshi Agarwal Marriage Clicks

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று (ஜனவரி 2ம் தேதி) கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.  மேலும் அதில், “தனது சிறு வயது நண்பரான நவ்நீத்தும், தானும் “என்றென்றும் என்றானோம்” ஒன்றாக வளர்ந்த இருவரும் இப்போது புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம். இந்த புதிய அத்தியாயத்திற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சாக்ஷி அகர்வால் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானார். ராஜா ராணி, காலா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

துணை வேடங்கள் மட்டுமின்றி பல படங்களில் முக்கிய கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதற்கு முன் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானார்.  மறுபக்கம், தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் தனது ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh
jos buttler